Site icon Sangathy News

இலங்கை – பூசா சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற கைதி!

பூசா சிறைச்சாலையின் உயர் குற்றவாளிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதி, இன்று (26) பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த கைதி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிம்சார அமல் என்ற கைதி, தற்கொலைக்கு முயன்றபோது சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version