Site icon Sangathy News

சீனாவில் முகத்தில் ஒப்பனையை 22 ஆண்டுகள் அகற்றாத பெண்ணுக்கு நேர்ந்த கதி

சீனாவில் முகத்தில் ஒப்பனையை 22 ஆண்டுகள் அகற்றாத பெண் ஒருவர் வேதனையை அனுபவித்துள்ளார்.

37 வயதாகும் அவர் ஜிலின் மாநிலத்தைச் சேர்ந்தவராகும். 15 வயது முதல் ஒப்பனை செய்துகொள்ளும் அவர் 22 ஆண்டுகளாக ஒரு நாள் கூட அதைக் கழுவியதில்லை, அகற்றியதில்லை என்றார்.

முகத்தில் உள்ள பருக்களை நீக்க 14 வயதில் களிம்பு ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. அதை மறைக்க அவர் ஒப்பனை செய்யத் தொடங்கினார்.

வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் மட்டமான முகப் பூச்சுகளைப் பயன்படுத்தியதால் நிலைமை மோசமானது.

ஒப்பனை, சிகை அலங்காரம் பற்றிக் கற்ற அவர் ஒப்பனையில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார். 2011ஆம் ஆண்டு முகத்தை மேலும் அழகுபடுத்த நினைத்து அவர் ஊசி வழி மருந்துகளைச் செலுத்திக்கொண்டார்.

எப்படியாவது ஒவ்வாமை சரியாகிவிடும், முகம் அழகாகிவிடும் என அவர் நம்பினார். மாறாக முகம் சிவந்து, சிதைந்து மோசமானது.

தன்னைப் போல் பொறுமையில்லாமல் பல முக அழகுப் பொருள்களைப் பயன்படுத்தி துன்பப்படவேண்டாம் என அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

Exit mobile version