Site icon Sangathy News

ஜப்பானில் விமான சேவைகளை ரத்து செய்ய வைத்த கரடி

ஜப்பானின் யமகட்டா விமான நிலையத்தில் கரடி ஊடுருவியதால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

காலை 7 மணிக்கு ஓடுபாதையில் தென்பட்ட கரடி சிறிது நேரத்தில் மறைந்துவிட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு மீண்டும் உள்ளே வந்ததால் ஓடுபாதை மூடப்பட்டது.

இதனால் டோக்கியோ, ஒசாகா, சப்போரோ மற்றும் நகோயா ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உள்ளூர் வேட்டைக்காரர்கள் விமான நிலைய வளாகத்தில் பொறிகளை வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version