Site icon Sangathy News

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் வழிகள்…!

முகம் கொழுப்பிற்கு இரட்டை கன்னம் மற்றும் தளர்வான கன்னம் ஒருவரின் முகத்தின் தோற்றத்தையும் கெடுத்து விடும்.

முகப் பயிற்சிகளுடன், முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க பல குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

அந்தவகையில் முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, கொழுப்பை குறைக்க உதவுகிறது.

எண்ணெய் மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை சாப்பிடுங்கள்.

தாடை உயர்த்தும் பயிற்சி, பல் சீவும் பயிற்சி போன்ற பயிற்சிகள் செய்வதால் மூலம் முக கொழுப்பை குறைக்கலாம்.

ரன்னிங், நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற கார்டியோ பயிற்சிகள் உடல் கொழுப்பை குறைக்கும். இது முகம் மற்றும் தாடை கொழுப்பையும் குறைக்க உதவும்.

அதேபோல், ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவது முகத்தின் வீக்கம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.

மேலும், மதுபானம், புகையிலை பயன்பாடு முகத்தில் நீர் தங்க வைத்து, தாடை கொழுப்பை அதிகரிக்கும். இவற்றை தவிர்ப்பது நல்லது.

Exit mobile version