தமது அணுசக்தி நிலையங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
சேதங்கள் குறித்த மதிப்பீட்டை ஈரானின் அணுசக்தி அமைப்பு மேற்கொண்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதல்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்கவில்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

