Site icon Sangathy News

இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பெதும் நிசங்கவின் சதத்தின் உதவியுடன், 458 ஓட்டங்களை குவித்தது..

இதற்கமைய 211 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் பிரபாத் ஜெயசூரிய 5 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதற்கமைய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் பெதும் நிசங்க தெரிவுசெய்யப்பட்டார்.

Exit mobile version