வட மாகாணத்தின் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரால் நாளை முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
மாகாண ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளால், வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்தின் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

