Site icon Sangathy News

கிரான்குளம் பகுதியில் விபத்து – மூவர் காயம்

கதிர்காமத்திலிருந்து, ஆரையம்பதி நோக்கிப் பயணித்த பேருந்தொன்று, பக்தர்களை இறக்கிவிட்டுத் திரும்பும் போது, வீதியை விட்டு விலகி மனமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு,கிரான்குளம் பகுதியில் இன்று (30) காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் பேருந்திலிருந்த மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும், வீதியிலிருந்த மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version