Site icon Sangathy News

ரசிகர்களுக்கு கௌரவமளித்த மஹேந்திரசிங் தோனி

கிரிக்கெட் வரலாற்றில் ‘கெப்டன் கூல்’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மஹேந்திர சிங் தோனி.

இவர் இந்திய அணிக்காக 3 வடிவிலான ஐசிசி கிண்ணங்களையும் வென்றுகொடுத்த ஒரே அணித்தலைவர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

இந்தநிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் “கெப்டன் கூல்” என்ற வாசகத்தை Trademark ஆக பதிவுசெய்ய மஹேந்திர சிங் தோனி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் தோனியின் அனுமதி இல்லாமல் வேறு எந்த நிறுவனமும் வணிக நோக்கத்திற்காக இந்த வாசகத்தை பயன்படுத்த முடியாது என குறிப்பிடப்படுகின்றது.

 

Exit mobile version