Site icon Sangathy News

5ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார் அசலங்க

இலங்கை அணியின் சரித் அசலங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்.

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அவர் சதம் கடந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 245 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version