Site icon Sangathy News

அதிவேக சதம் – வைபவ் சூர்யவன்ஷி சாதனை

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது.
இதன்படி இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 363 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில்  வைபவ் சூர்யவன்ஷி 52 பந்தில் சதம் விளாசிளனார்.
இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.
தற்போது குறித்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
Exit mobile version