இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 587 ஓட்டங்களை குவித்தது.
இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 407 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இந்தநிலையில் இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியுள்ளார்.
முன்னதாக சுப்மன் கில் முதலாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

