Site icon Sangathy News

அனுஷ்கா நடித்த Ghaati திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் இடம்பெற்ற சைலோரே பாடலை படக்குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்பொழுது பட ரிலீசை தள்ளிவைத்துள்ளது. இதனை படக்குழு அறிவிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

 

Exit mobile version