Site icon Sangathy News

அமெரிக்க வரி – வருமான இழப்பை ஈடுசெய்ய நடவடிக்கை

அமெரிக்க வரி – வருமான இழப்பை ஈடுசெய்ய நடவடிக்கை

2025 ஒகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில், அமெரிக்கா விதித்த 30 வீத வரியால் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை விவாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

திறைசேரியின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கச் செயற்பாட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரி வருமான இலக்குகளை நாடு அடைய முடியாமல் போகலாம்.

எனவே, இந்த சூழ்நிலையின் விளைவுகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று, திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதேவேளை, இலங்கையிலிருந்து சுமார் 40 வீத ஆடைகள் அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பப்படுவதால், ஆடைத் துறைக்குச் சலுகைகளைப் பெறுவது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த உத்தேசித்துள்ளதாக, திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு எந்த திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை.

US tax, Action, Compensate, Income

Exit mobile version