FIFA கழக மட்ட அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் செல்சி அணி வெற்றி பெற்றுள்ளது.
குறித்த இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) மற்றும் செல்சி (Chelsea FC) ஆகிய அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி உலக கிண்ணத்தை சுவீகரித்தது.

