Site icon Sangathy News

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் வேடன்

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரின் மகனான வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ரெப் இசைப் பாடகராக உள்ளார்.

அவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.

இந்தநிலையில் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில், ரெப் பாடகர் வேடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார்.

விஜய் மில்டன் இயக்கி வரும் குறித்த திரைப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் விரைவில் வெளியாகவுள்ளது.

 

Exit mobile version