சந்தையில் வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பெரிய வெற்றிலை ஒன்று 10 ரூபாவுக்கும், சிறிய வெற்றிலை ஒன்று 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், வெற்றிலை மாத்திரமன்றி பாக்கின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், வெற்றிலை மற்றும் பாக்கு விற்பனை குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

