Site icon Sangathy News

ஆனந்தசங்கரிக்கு கனேடிய பிரதமர் ஆதரவு

தனது அமைச்சரவையின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு, கனேடிய பிரதமர், மார்க் கார்னி ஆதரவை தெரிவித்துள்ளார்.

சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் குடியேற்றத்திற்கு கேரி ஆனந்தசங்கரி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுவது தொடர்பிலேயே, பிரதமர், தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் குறித்த சூழ்நிலையில் வெளிப்படையாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ள கார்னி, அவர் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாக கார்னி கூறியுள்ளார்.

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு எதிராக குடியேற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள போதிலும் அவருக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அந்த நாட்டு பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கேரி ஆனந்தசங்கரி அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்துக்கு கடிதங்களை அனுப்பியுள்ளமை முன்னதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் அவர் இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் கேரி ஆனந்த சங்கரி குறித்த சந்தர்ப்பத்தில் வெளிப்படையாக இருந்தார் என்றும் அவர் மீது தமக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Exit mobile version