Site icon Sangathy News

IPHONE பிரியர்களுக்கு மகிழ்ச்சியான

செய்தி சேம்சங் (Samsung) உட்பட பல நிறுவனங்கள் தங்கள் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனுக்கான (IPHONE) எதிர்பார்ப்பு சந்தைகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் ஆப்பிள் (Apple) நிறுவனம், மடிக்கக்கூடிய ஐபோனை (IPHONE) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சாதனம், iPhone 18 தொடரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த மடிக்கக்கூடிய ஐபோனின் முதன்மை திரை 7.9 முதல் 8.3 அங்குலங்கள் வரை இருக்கலாம் என கருதப்படுகின்றது.

அத்துடன் வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் 2,000 அமெரிக்க டொலர் முதல் 2,500 அமெரிக்க டொலரிற்கும் மேல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version