Site icon Sangathy News

கொலம்பியாவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு

வடமேற்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் சுமார் 12 மணி நேரம் சிக்கித் தவித்த 18 தொழிலாளர்கள் அவசரகாலக் குழுவினரால் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவின் ஆன்டிகுவியா பகுதியில் உள்ள எல் மினோன் சுரங்கத்தில் உபகரணங்கள் செயலிழந்ததால் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

12 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, அனைத்து தொழிலாளர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்று கொலம்பியாவின் தேசிய சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version