ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
முதலில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
இதில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடும் முதல் டி20 போட்டி இதுவாகும்.

