சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,828 கிலோகிராம் நிறையுடைய உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை, சஞ்சீதவத்தை பகுதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரும், மீட்கப்பட்ட உலர்ந்த இஞ்சியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

