இந்தியாவிலிருந்து கட்டார் – தோஹா நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள கேலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமாக மீண்டும் அதே விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக, ஏர் இந்திய விமான சேவை அறிவித்துள்ளது.
விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

