Site icon Sangathy News

கில்லுக்கும், இந்திய அணிக்கும் ராசியில்லாத நாணய சுழற்சி

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்தநிலையில் குறித்த தொடரில் இடம்பெற்ற 4 நாணய சுழற்சியிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை இந்திய ஆடவர் அணி கடந்த ஜனவரில் இருந்து 14 போட்டிகளில் நாணய சுழற்சியில் தோற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version