Site icon Sangathy News

மகளிர் செஸ் உலக கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் திவ்யா

FIDE உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 – 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.

இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். மேலும், இதன் மூலம் Candidates தொடருக்கும் திவ்யா தேர்வாகி உள்ளார்

மற்றொரு அரையிறுதி போட்டியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஹம்பி இப்போது டை-பிரேக்கரில் டிங்ஜி லீயை எதிர்கொள்வார்.

 

Exit mobile version