Site icon Sangathy News

சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.3 மில்லியனை கடந்தது

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரை மொத்தமாக 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 145,188 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் இருந்து 27,786 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version