Site icon Sangathy News

சீனாவில் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க மானியம் வழங்க நடவடிக்கை

சீனாவில் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க நாடு தழுவிய ரீதியில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை கொள்கையை ரத்து செய்த பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவில் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித் தொகைகள் உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிக்க சீனா முழுவதும் பல மாகாணங்கள் சில வகையான கொடுப்பனவுகளை முன்னோட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version