Site icon Sangathy News

பாலஸ்தீனத்தை தனி நாடாக பின்லாந்தும் அங்கீகரிக்கிறது!

அரசாங்கம் பரிந்துரை செய்தால் பாலஸ்தீன வட்டாரத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கத் தாம் தயார் என்று பின்லாந்து ஜனாதிபதி அலெக்ஸாண்டர் ஸ்டப் கூறியுள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.

அப்போது பாலஸ்தீன வட்டாரத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட 15 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

அத்துடன், இரு நாட்டுத் தீர்வை ஆதரிப்பதாக பின்லாந்துப் பிரதமர் பெட்டெரி ஓர்போ கூறியுள்ளார்.

ஆனால், பாலஸ்தீன வட்டாரத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க அரசாங்கம் தயாரா என்பது பற்றி அவர் ஏதும் கூறவில்லை.

Exit mobile version