புளோரிடாவில் உள்ள நீச்சல் குளத்தில் தனது மருமகளை மூழ்கடிக்க முயன்றதாகக் கூறப்படும் இங்கிலாந்து நபர் மீது அமெரிக்க பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பக்கிங்ஹாம்ஷையரின் பீக்கன்ஸ்ஃபீல்டைச் சேர்ந்த 62 வயதான மார்க் ரேமண்ட் கிப்பன், தனது பேரக்குழந்தைகள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 33 வயதான அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் தண்ணீருக்குள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பக்கத்து வீட்டில் தங்கியிருந்த ஒரு ஜோடி, பொலிஸாருக்கு அறிவித்த பின்னரே அவர் அதனை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் 9 வயது மகளும், குறித்த நபர் தனது தாயை மூழ்கடிப்பதைத் தடுக்க நீச்சல் குளத்தில் குதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

