Site icon Sangathy News

இஸ்ரேலிய பிரதமரின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம்..!

காசா நகரத்தை கையகப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் ஹைஃபா போன்ற நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவிலும் கூடி கோசங்களை எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, காசாவில் தனது போரை விரிவுபடுத்த இஸ்ரேல் எடுத்த முடிவு, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளிடமிருந்து எதிர்ப்பை பெற்றுள்ளது.

அத்துடன், இஸ்ரேலுக்கான இராணுவ ஏற்றுமதியை நிறுத்த ஜெர்மனியும் தீர்மானித்துள்ளது.

Exit mobile version