Site icon Sangathy News

கொழும்பு பங்குச் சந்தை புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டம்

உள்நாட்டு மூலதனச் சந்தையின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் சர்வதேச ரீதியிலான போட்டித் தன்மை என்பனவற்றை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து, கொழும்பு பங்குச் சந்தை புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாகப் பங்கு பரிவர்த்தனைக்கான மத்தியக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறந்த சேவையினை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மூலதனச் சந்தைக்குப் புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்பார்த்த இலக்கினை அடையவில்லை என இலங்கை பரிவர்தனை ஆணைக்குழுவின் தலைவர் ஹரீந்திர திசபண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

Exit mobile version