Site icon Sangathy News

யாழில் ஐவருக்கு மலேரியா நோய்த் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து பேருக்கு மலேரியா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே, கடுமையான நோய் நிலைமைக்குள்ளான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவைக்குக் கருத்துரைத்த, யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன், உயிரிழந்தவரிடம் இருந்து ஏனையவர்களுக்கு மலேரியா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

 

Exit mobile version