Site icon Sangathy News

இலங்கையின் தேயிலை நிலப்பரப்புக்கு யுனெஸ்கோ வழங்கிய அங்கீகாரம்..!

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய கலாசார நிதியம் யுனெஸ்கோவிற்கு இதனைப் பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையில் ஏற்கனவே அநுராதபுரம், சிங்கராஜா மற்றும் மத்திய மலைநாட்டுப் பாரம்பரிய தளங்கள் உள்ளிட்ட 8 பாரம்பரிய தளங்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மலைநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கும் முயற்சி சுற்றுலாத்துறைக்கு பெரும் நன்மை பயக்கும் என, அமைச்சர் சுனில் செனவி கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்துவது இதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த பரிந்துரையானது நுவரெலியா, கண்டி, சபரகமுவ, ஊவா மற்றும் சபரகமுவ பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது எனவும், இது ஏனைய யுனெஸ்கோ தளங்களிலிருந்து வேறுபட்டது எனவும் பேராசிரியர் அதுல ஞானப தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version