Site icon Sangathy News

த.வெ.க. மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து

மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Exit mobile version