ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், யுக்ரைனின் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் ஒரு உச்சிமாநாடு நடைபெறுவதை கிரெம்ளின் இன்னும் சாத்தியமான விடயமாக அறிவிக்கவில்லை.
எனினும், யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி கடந்த வாரம் அலஸ்காவில் புடினைச் சந்தித்தார்
பின்னர், ஏழு ஐரோப்பியத் தலைவர்களையும், செலென்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னரே, ரஷ்ய-யுக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அழுத்தம் வந்துள்ளது.
இந்தநிலையில், “இந்த பிரச்சினை கடினமானது” என்று ட்ரம்ப் ஒப்புக் கொண்டார்,
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விரோதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதேவேளை, யுக்ரைனுக்கான, அமெரிக்கா அனுசரணையிலான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அத்தகைய உறுதிமொழிகள் கியேவின் இறையாண்மைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று செலென்ஸ்கியும், ஐரோப்பியத் தலைவர்களும் ட்ரம்பை நம்ப வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

