2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை, மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இதற்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதன்படி, ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பெங்களூரில் மோதுகின்றன.
இந்த நிலையில், ஹர்மன்ப்ரீத் (Harmanpreet) தலைமையிலான 15 பேர் கொண்ட மகளிர் குழாமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இந்த அணியில் முக்கிய வீராங்கனை ஷெஃபாலி வர்மா (shafali verma) இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

