Site icon Sangathy News

தாய்லாந்தில் காணப்படும் அரிய வகை ஊதா நிற நண்டுகள்!

கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் நண்டுகளைப் பார்த்திருக்கலாம். ஆனால், ஊதா நிற நண்டுகளைப் பார்த்ததுண்டா?

இந்த அரிய வகை நண்டுகள், தாய்லந்தில் காணப்பட்டுள்ளன.

ஊதா நிற நண்டுகளின் படங்களை தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தமது Facebook பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

நண்டுகளின் உடலில் ஒரு பகுதி வெள்ளையாகவும் இன்னொரு பகுதி ஊதா நிறமாகவும் காணப்படுகிறது.

பேட்சபூரி வட்டாரத்தின் Kaeng Krachan National Park பூங்காவில் அவை காணப்பட்டதாக தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

இந்த அரிய வகை நண்டுகள் அங்கிருப்பது பூங்காவின் பல்லுயிர்ச்சூழல் ஆரோக்கியமாய் இருப்பதைப் பிரதிபலிப்பதாகவும் அப்பிரிவு கூறியது.

ஊதா நிற நண்டின் படங்களைக் கண்ட இணையவாசிகள் அதன் அழகில் பிரமித்து வருகின்றனர்.

Exit mobile version