நடப்பாண்டில் இதுவரை 47 பேர் சுட்டுக் கொலை..!

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 47 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 50 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று கொழும்பு புறநகர்ப் பகுதியான பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

21 வயதுடைய ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles