Site icon Sangathy News

சர்வதேச விசாரணையை கோரி வடக்கு கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டம்…!

உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிப்பதுடன், சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழின அழிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

Exit mobile version