Site icon Sangathy News

பிரித்தானிய பாடகியை அதிச்சிக்குள்ளாக்கிய AI பாடல்

தமக்குத் தெரியாமல் யாரோ தமது பெயரில் பாடல்களைச் செயற்கை நுண்ணறிவால் தயாரித்திருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகி எமிலி போர்ட்மன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாரோ பாட்டெழுதி, யாரோ இசையமைத்து தம் பெயரில் போட்டுக் கொண்டது போல் அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார்.

அவருக்கு உரித்து இல்லாத அந்தப் பாடலுக்கு அவருடைய இரசிகர் அவருக்கு வாழ்த்துச் சொன்னபோது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உண்மையை பிறகுதான் தெரிந்து கொண்டுள்ளார். ஓர்க்கா (Orca) என்ற பெயர் கொண்ட படைப்பு iTunes மற்றும் Spotify ஆகிய தளங்களில் பதிவிடப்பட்டது.

அவர் பாடல்களுக்குப் பெயர் எவ்வாறு சூட்டுவாரோ அவ்வாறு செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட பாடல்களுக்கும் பெயர்கள் அமைக்கப்பட்டன என்று போர்ட்மன் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவால் இசைத் துறை பெரிதும் பாதிக்கப்படுவதாகப் பலர் அஞ்சுகின்றனர்.

Exit mobile version