Site icon Sangathy News

பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு : அதிர்ச்சி சம்பவம்..!

பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை 6.11 மணியளவில் 12 வயதான லோகன் கார்ட்டர் என்பவர் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இருப்பினும் சிறுவன் லோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பொலிஸார் வழங்கிய தகவலின் படி, சிறுவன் லோகன் கார்ட்டர் விளையாட்டு உபகரணங்களில் இருந்து தவறி விழுந்து இருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிறுவன் உயிரிழப்பு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version