குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று மதியம், ஜோல்வா கிராமத்தில் உள்ள சந்தோஷ் டேஸ்டைல் மில் ஆலையில் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த டிரம் வெடித்துச் சிதறியதால் தீவிபத்து ஏற்பட்டது. 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, காயமடைந்த 20 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு சூரத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

