பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அட்டாவுல்லா மெங்காலின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது.
அந்தப் பேரணி நிறைவடைந்ததும் , பங்கேற்பாளர்கள் அனைவரும் அங்குள்ள ஷாஹ்வானி திடலில் திரண்டுள்ளனர்.
இதன்போது, மர்ம நபர்கள் நடத்திய குண்டு தாக்குதலில், சுமார் 14 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

