Site icon Sangathy News

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – நீதிமன்றில் முன்னிலையான இளைஞன்.

காலி மீட்டியாகொட பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட தலவாக்கலையில் இளைஞன் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த நபரை காலி மீட்டியாகொட காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த நபர் லிந்துலை அக்கரப்பத்னை ஹோல்புறுக் பகுதியிலுள்ள தனது மனைவியின் வீட்டில்
தலைமறைவாக இருப்பதாக தலவாக்கலை சிறப்பு விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டார்.

Exit mobile version