Site icon Sangathy News

ஆசியக் கிண்ண கிரிக்கெட் : ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இன்று மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 13.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் குல்திப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், சிவம் டூபே 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதன்படி, 58 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

Exit mobile version