Site icon Sangathy News

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து..!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் கொலன்னாவை தீயணைப்பு படைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version