Site icon Sangathy News

ஆசியக் கிண்ண கிரிக்கெட் : பங்களாதேஷ் – ஹொங்கொங் இன்று பலப்பரீட்சை..!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதனிடையே, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பெற்றது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்திய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 13.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் குல்திப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிவம் டூபே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்படி, 58 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியானது, இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 27 பந்துகள் என்ற குறைவான பந்துகளை எதிர்கொண்டு பெற்ற வெற்றியாக வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

 

Exit mobile version