2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
2015 ஆம் ஆண்டின் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 2,883 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 2,749 பில்லியனாக காணப்பட்டது.
இதே நேரத்தில், விவசாயம் 2%, தொழில்துறை 5.8% மற்றும் சேவைகள் 3.9% ஆக வளர்ச்சியடைந்துள்ளன.

