Site icon Sangathy News

ஆசிய கோப்பை 2025: ஆப்கானிஸ்தானுக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.

 

Exit mobile version