Site icon Sangathy News

இட்லி கடை திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

தனுஷின் இயக்கத்தில் 4ஆவது திரைப்படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது.

இது தனுஷ் நடிக்கும் 52ஆவது திரைப்படமாகும்.

குறித்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஒக்டோபர் முதலாம் திகதி வெளியாகவுள்ளது.

இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்தநிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version